கச்சா பட்டு சாயம் போடும் முறை

முன் பதிவில் கச்சா பட்டு முறுக்கேற்றும் முறை பற்றி பார்த்தோம் , இந்த பதிவில் கச்சா பட்டு சாயம் போடும் முறை பற்றி பார்க்கலாம்.

சந்தைக்கு வந்த கச்சா பட்டு ( படம் 1 ) சாயபட்டறைக்கு செல்கிறது, அங்கு சாயம் போடுபவர்கள் முதலில் அவர்களுக்கு தகுந்தபடி காலில் மடித்து தயார் செய்து கொள்கிறார்கள் ( படம் 2 ).

சாயம் போடும் முறை பற்றி பார்போம் :-
  • முதிலில் குளிர்ந்த நீரில் நன்றாக ஊறவைக்கிறார்கள் ( படம் 3 ) ,
  • கொதி நிலையில் உள்ள நீரில் சோப்பு மற்றும் சொடமாவு கலந்து 15 -20 நிமிடங்கள் வரை சுழர்ச்சி முறையில் அலசி கொதிக்கவைகிறார்கல் ( படம் 4 மற்றும் 5 ),
  • பிறகு குளிர்ந் நீரில் முன்று முறை அலசி சுத்தம் செய்கிறார்கள், இப்படி செய்வதினால் கச்சா பட்டில் உள்ள கழிவு , சோப்பு மற்றும் சொடமாவு நீக்கப்பட்டு மிருதுவான பட்டாக மாறுகிறது ( படம் 6 ) ,
  • பின்பு நீத்திர்கேற்றபடி சாயா கலவை கலந்து மறுபடியும் 15 -20 நிமிடங்கள் வரை கொதிநீரில் சுழர்ச்சி முறையில் அலசி கொதிக்கவைகிறார்கல் ( படம் 7 ),
  • மறுபடியும் குளிர்ந் நீரில் முன்று முறை அலசி சுத்தம் செய்கிறார்கள் ( படம் 8 ),
  • இறுதியில் குளிர்ந் நீரில் அசிடிக் அமிலம் கலந்து சாயம் போட்ட பட்டை 5 நிமிடங்கள் ஊற ( படம் 9 ) வைத்து தண்ணிரை சுத்தமாக பிழிந்து எடுத்து நிழலில் காய வைக்கிறார்கள் ( படம் 10 ).

 புகைப்பட தொகுப்பு
கச்சா பட்டு ( படம் 1 )
காலில் மடித்து தயார் செய்து கொள்கிறார்கள் ( படம் 2 )
நீரில் ஊறவைக்கிறார்கள் ( படம் 3 )
கொதிக்கவைகிறார்கல் ( படம் 4 மற்றும் 5 ) 
கொதிக்கவைகிறார்கல் ( படம் 4 மற்றும் 5 )
மிருதுவான பட்டாக மாறுகிறது ( படம் 6 )
கொதிநீரில் சுழர்ச்சி முறையில் அலசி கொதிக்கவைகிறார்கல் ( படம் 7 )
கொதிநீரில் சுழர்ச்சி முறையில் அலசி கொதிக்கவைகிறார்கல் ( படம் 7 )
சுத்தம் செய்கிறார்கள் ( படம் 8 )
நிமிடங்கள் ஊற ( படம் 9 )
சுத்தமாக பிழிந்து எடுத்து நிழலில் காய வைக்கிறார்கள் ( படம் 10 )
சுத்தமாக பிழிந்து எடுத்து நிழலில் காய வைக்கிறார்கள் ( படம் 10 )



இதற்குப்பின் நெசவாளர்களிடம் செல்கிறது.

அடுத்த பதிவில் பட்டு வரைபட நிபுணர்கள் பற்றி காண்போம்.

1 comment:

Note: Only a member of this blog may post a comment.